மக்கள் சந்திப்புத் தொடர்
அமைச்சருடன் ஒரு காபி
மாதந்தோறும் மக்களுடன் ஒரு மனமார்ந்த உரையாடல்
மாண்புமிகு அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி அவர்களுடன் நேரடியாக உரையாடும் பிரத்யேக மக்கள் மேடை — ஒரு கோப்பை காபியுடன்.

நிகழ்ச்சியின் நோக்கம்
“ஒவ்வொரு மாபெரும் சமூக மாற்றமும் ஒரு எளிய, உண்மையான உரையாடலில்தான் தொடங்குகிறது. ஒன்றாக அமர்ந்து, பரிவோடு செவிமடுத்து, ஒவ்வொரு குடும்பமும் முன்னேறுவதற்கான பாதைகளை நாம் இணைந்து உருவாக்குவோம்.”
“Coffee with Amaichar” என்பது மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள், பல்வேறு சமூகப் பின்னணிகளையும் தொழில்களையும் சார்ந்த மக்களை ஒவ்வொரு மாதமும் நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அன்றாடச் சவால்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளைக் கேட்டறியும் ஒரு சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும்.
ஒரு கோப்பை காபியுடன், எவ்விதமான முறையான சந்திப்பு நெறிமுறைகளும் இன்றி, மக்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும். இதன் மூலம் பல்வேறு தொழில்கள், சமூகப் பின்னணிகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்களைச் சேர்ந்த மக்களின் குரல்களைக் கேட்டு, அவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
இந்த மாதத்தின் கருப்பொருள்
மனம் திறந்து… மகளிருடன்!
பங்கேற்கும் பெண்கள்
- மீன் விற்பனை செய்யும் பெண்கள்
- மலர் விற்பனையாளர்கள்
- இல்லத்தரசிகள்
- வீட்டிலிருந்தே பேக்கிங் தொழில் செய்பவர்கள்
- பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்
- மருத்துவர்கள்
- கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்
- பெண் தொழில்முனைவோர்
இந்த மாத நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பார்கள்.
அவர்களின் அன்றாட வாழ்க்கை, தொழில் சார்ந்த சவால்கள், குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரத் தேவைகள், சாதனைகள், கனவுகள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடுவார்.
சமூகத்தின் பல்வேறு நிலைகளில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் நேரடியாகக் கேட்டறிந்து, பெண்களின் நலன், உரிமைகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயசார்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய சந்திப்பு!
ஒவ்வொரு மாதமும் புதிய கருப்பொருள், புதிய பங்கேற்பாளர்கள், புதிய அனுபவங்கள் என இந்தத் தொடர் விரிவடையும்.
வரவிருக்கும் மாதங்களில்
- விவசாயிகள்
- ஆசிரியர்கள்
- மருத்துவப் பணியாளர்கள்
- சுயஉதவிக் குழு உறுப்பினர்கள்
- கைவினைக் கலைஞர்கள்
- தொழில்முனைவோர்
- இளைஞர்கள்
மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, உரிய கவனம் தேவைப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் தேவையான தொடர் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் இதன் நோக்கமாகும்.
ஒரு கோப்பை காபி… பல வாழ்க்கைக் கதைகள்… புதிய புரிதல்கள்… அர்த்தமுள்ள உரையாடல்கள்!
மக்களுடன் நெருக்கத்தை உருவாக்குவது, அவர்களின் குரல்களைக் கேட்பது, அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்வது — இவற்றை ஒரு கோப்பை காபியுடன் தொடங்கும் இயல்பான உரையாடலின் மூலம் சாத்தியமாக்குவதே “Coffee with Amaichar” நிகழ்ச்சியின் தனித்துவமாகும்.
மக்களைச் சந்திப்போம்; மனங்களைப் புரிந்துகொள்வோம்.
“அமைச்சருடன் ஒரு காபி” எவ்வாறு செயல்படுகிறது?
வெளிப்படையான மக்கள் கருத்துக்கள் மற்றும் நேரடி களத் தீர்வுகளுக்கான ஆக்கப்பூர்வ வடிவம்.
1. வெளிப்படையான, நேரடி உரையாடல்
அதிகாரத்துவத் தடைகளோ சிக்கலான நெறிமுறைகளோ இன்றி, ஒரு கோப்பை பில்டர் காபியுடன் நேரடியாக அமர்ந்து மக்கள் பிரச்னைகளையும் கள யோசனைகளையும் விவாதிக்கும் தளம்.
2. துறைசார் கருப்பொருள் அமர்வுகள்
மாதாந்திர அமர்வுகள் குறிப்பிட்ட தலைப்புகளில் (மகளிர் தொழில்முனைவு, குழந்தைகள் ஊட்டச்சத்து, மாணவர் நலன், முதியோர் பாதுகாப்பு, நகர்ப்புற கட்டமைப்பு) திட்டமிடப்பட்டு நடத்தப்படும்.
3. செயல்வடிவ மக்கள் நலன் & தொடர் நடவடிக்கை
ஒவ்வொரு அமர்விலும் பெறப்படும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் துறை அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவான நிர்வாக நடவடிக்கைகளாக மாற்றப்படும்.